ஆளுக் காளு பிச்சை எடுக்கும் முதலாளியே!
யாரு இட்ட பிச்சையிலே நீ வாழுற!
பாட்டன் பூட்டன் விட்டுப் போன சொத்து எவுவளவு--மொத்தம்
கூட்டிப் பெருக்கி கணக்குப பார்த்தால் ஏது இவ்வளவு?
கோடிகள் ஏது இவ்வளவு?
பாடு பட்டு உழைப்பால் உயர்ந்த டாடா பிர்லாவா!
ஓடி ஓடி தேடிச் சேர்த்த அம்பானிகளா!
கோடி கோடி கொடை வள்ளல்கள் வெளியில் பேசல--உதவி
கொடுக்காட்டியும் பரவாயில்ல கெடுத்து வைக்காதே!
மனிதம் கெடுத்து வைக்காதே.
வாசலுக்கு வருமுன்னே நாயை உசுப்புறே!.
தேசநலன் பேசிப் பேசி வேசம் பசப்புறே!.
உதவியையும் பிச்சை என்றே ஏளனம்
செய்யுறே!--ஆனால்
பதவி எனும் பிச்சை கேட்டு கால்களில் விழுகுறே!
ஏழை கால்களில் விழுகுறே!
பேரிடர் காலம் இதில் ஊரடங்கிக் கிடக்குது.
அரசியல் ஆக்குவதும் அரசியலார் வழக்கது.
நேர்ந்த இடர் அத்தனையும் தீர்ந்தே எழுந்தது--கொடை
வேந்தனவன் பாரிவள்ளல் ஆண்ட தமிழ் நாடிது.
மனிதம் வாழும் நாடிது.
கொடை கொடுப்பீர் கருணையோரே!
விடை கொடுப்போம் கொரனாவுக்கே!
ஏழையரின் வாழ்வாதாரம் ஏற்றம் பெறச் செய்வோமே--தொடரும்
நாளையிங்கு ஏழையில்லா நாடு ஒன்று
ஆக்குவோமே!
தமிழ் நாடு என்றே சொல்வோமே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment