சின்னப் பையன் அறியலயே!
சிந்தையில எண்ணலயே!
ஆத்தாடி உன் நினைப்பு கொல்லுதம்மா
கட்டறுந்த காத்திடிபோல் கத்துதம்மா!
சென்னையிலே கண்டமுண்ணு
சோசியரும் சொல்லலயே!
கண்டபடி சுத்துனது தப்பாப் போச்சே
கொரனா தொற்றுனதால் தனிமை ஆச்சே!
ஊரெல்லாம் ஒரு பேச்சு:
ஊரடங்கும் போட்டாச்சு.
சமத்தாட்டம் நான் அடங்கி இருந்திருந்தா;
இப்படி தனிமையிலே ஏங்கிடவும்
வேண்டாமே!
நாளையும் தேதி பார்த்து நில்லம்மா.
பெண்ணாகப் பிறந்தாயோ!
கண்ணீரில் நனைந்தாயோ!
என் ஆயுள் கெட்டியம்மா உன்தாலி காக்குமம்மா!
அண்ணாந்து பார்த்தாலும்
ஆகாயம் நீயம்மா!
இன்னொரு பிறவி வந்தா எனக்கு நீ தாயம்மா!
வீட்டுக்கு அடங்காப் புள்ள;
வீணானது எத்தனையோ!
இதோ எந்தன் தெய்வங்கள் டாக்டர்கள்.
நோயோட காலம் நாளும் இருவாரம்மா!
தீர்த்தனுப்பும் தமிழரசு வாழ்த்தம்மா!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment