கருணை உள்ள உள்ளங்கள்.
கடவுள் போன்ற தெய்வங்கள்.
உலகம் அழிந்தும் சாகாது.
மழையும் ஒழிந்து போகாது.
அன்னை போன்று ஆதரிப்போர்
மண்ணும் வாழ அவதரிப்பார்.
மனிதம் இன்னும் மறிக்கவில்லை
மழையும் மண்ணை பிரிக்கவில்லை.
உறவுகள் எல்லாம் எதுவரை?
உடலும் உயிரும் பிரியும்வரை.
கர்ண னுக்கு மரணமில்லை.
கருணை மனிதம் மறிப்பதில்லை.
பேரிடர் காலம் வாழ்வியல் சோதனை.
தேரிடும் கோலம் மானுடர் சாதனை.
ஊறுங் கருணை காப்பது ஞாலினை
வாழுங் கருணர் மீட்பர் ஊழினை.
பச்ச தாபம் பகிர்வது மனிதம்.
பிச்சை இடுவது பேர்புகழ் புனிதம்.
பதுக்கிய கோடிகள் எங்கடா இருக்கும்!
புதைக்கவும் பிணத்தை இடுகாடும் மறுக்கும்.
கொ.பெ பி.அய்யா.
No comments:
Post a Comment