Wednesday, 6 May 2020

என்னப்பா கடவுளே!

என்னப்பா கடவுள் நீங்க
இப்படிப் பண்றீங்களப்பா!
கொரனாவ ஆடவிட்டு
கோயிலுக்குள் ஒளிஞ்சியப்பா!

பூட்டிய கோவிலுக்குள்
பத்திரமா இருக்கியப்பா!
மாட்டிய கருவறைக்குள்
மந்திரங்கள் பலிக்கலியோ!

மந்திரங்கள் ஓதுவது,
மனிதகுலம் காக்கத்தானே!
தந்திரங்கள் வெல்லுமானால்
தெய்வங்கள் எதற்குத்தானோ!

எவஞ் செஞ்ச கொரனாவோ
இந்த ஆட்டம் போடுதே!
தவஞ் செஞ்சி கொரனாவும்
வரம் வாங்கி வந்தததோ!

வரம் கொடுத்த உன்னாலயே
திரும்ப வாங்க முடியலையோ!
தேச மெல்லாம் அழிந்தபின்
பூசை செய்ய யாரிருப்பார்!

அறிவியல் முற்றிவிட்டோம

ஆகாயத்தை தொட்டுவிட்டோம்

தேடித் தேடித் தேடியுன்னை

திக்கற்றுத் திரும்பிவிட்டோம்.

சூரியனை மிஞ்சிவிட்டோம்

சுட்டெரிக்க விஞ்சிவிட்டோம்.

கடல் கொதித்து ஆவிமூடி

கார்வெள்ளம் மூழ்கிவிட்டோம்.

பாவஞ் செய்யும் மனிதகுணம்:

பொறுப்பது இறைவன் மனம்.
வணங்கினோம் இயற்கையுன்னை!
இணங்கினோம் காப்பாய்!எம்மை!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment