Saturday, 9 May 2020

இராசியான முதல்வர்.

இராசியான தமிழ் முதல்வர்,
நேசம் அம்மா தலைப் புதல்வர்;
வாசியான எடப் பாடியார்--இந்திய
தேசம்புகழ் விவசாயி வாழ்கவே!

விவசாயி பெற்ற மகன்,
விவசாயம் செய்யும் உழவன்;
விவசாயம் நாட்டு நலன்--தமிழக
மவுசான முதல்வர் வாழ்கவே!

தவம் என்ன செய்தோமோ!
விவசாயி முதல்வர் ஆனார்.
அவசியம் இவர் அன்றோ--வாழும்
விவசாயம் வாழ வாழ்கவே!

அவதாரம் அம்மா சன்னதி
தவசியார் பன்னீர் அய்யா
துணை முதல்வர் துணையோடு--தீய
வினை முடித்து வாழ்கவே!

அண்ணாவழித் தலைவர் ஆட்சி,
அம்மாவழி பழனியார் ஆட்சி;
சொன்ன முன்னோர் நிரந்தரம்--பூமி
உள்ளவரை ஆளும் வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment