Tuesday, 19 May 2020

புதிய வானம் புதிய பூமி!

புதிய வானம் புதிய பூமி
எங்கும் புது வழி தெரிகிறது.
கொரனா பிரிகையிலே அதை வழியனுப்ப
மக்கள் கரவொலி அதிர்கிறது.
ஓஹோஹோ.

கொரனா பாவியனின் காலத்திலே
மனிதன் படித்துக் கொண்ட பாடத்திலே
இனிதான் இருக்கு எதிர்காலம்.
என்ற நம்பிக்கை பிறக்கிறது.
கொண்டு இதயத்தில் நாளும் துடிப்பிருக்க
மலரும் காலம் புலர்கிறது.
மலரும் காலம் புலர்கிறது.
ஓ..ஓ..ஓ...லால்ல.....லா....லா.

உள்ள வாழ்கையினை வாழ்கையிலே
நெஞ்சில் வழிகளைத் தேடுகையிலே
வல்லவர் எல்லாம் வளம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது.
நிலம் உயிர் வாழ குலம் எழவேண்டும்
என்ற ஓசை ஒலிக்கிறது.
என்ற ஓசை ஒலிக்கிறது.
ஓ...ஓ...ஓ...லால்ல...லா...லா.....

சொந்த ஊரு என்றும் சொந்தமில்லை.
கொண்ட பேரும் கண்டு சேர்வதில்லை.
மனிதம் ஒன்றின் நெறி கூடி
அன்பாம் இயற்கையை வணங்குவோம்.
கொரனா ஒழிந்தது போல் துயர் ஒழிந்ததென்று.
வளர் பாதையில் நடந்திடுவோம்.
வளர் பாதையில் நடந்திடுவோம்.
ஓ...ஓ...ஓ....லால்ல....லா....லா...

புதிய வானம் புதிய பூமி
எங்கும் புது வழி தெரிகிறது.
நீ பிரிகையிலே உன்னை வழியனுப்ப
மக்கள் கரவொலி அதிர்கிறது.
ஓஹோஹோ.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment