சிக்கனம் பழகு
தேக்கும் நீரின் சிக்கனக் காலம்.
அணையைக் காக்கும் அவசரம்
நாளும்,
உழைக்கும் காசும் நாளைக்கு ஆளும்.
கண்ணுக்குத் தெரியாமல் கசிவதுபோல்,
கொஞ்சங் கொஞ்சம் குறையும்
அணை போல்
தேவை அற்ற வீண் செலவும்
பாழ்.
அவசியமில்லா ஆடம்பரச் செலவதுபோல்.
பருவகாலம் மாறி மாறும் போல்
புரிந்தால் வயதில் சிக்கனம்
தூள்.
வரவுக் குள்ளேயே சிக்கனம்
மேல்.
வரவு செலவுக் கணக்கில் வாழ்.
ஆடம்பர வாழ்க்கை ஆபத்து
ஆனது.
தேடிய செல்வம் தெய்வம் போலது.
கணக்குப் போட்டு வாழும் வாழ்வு.
தனக்குள் வங்கி தானே தேர்வு.
பெருமை கொண்டு வாழ்ந்தார்
இல்லை.
பொறுமை காத்து வீழ்ந்தாரும் இல்லை.
அருமை காத்திடும் சிக்கன வாழ்க்கை,
சிறுமை தவிர்த்த சிறப்புக்குள்
மேற்கை.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment