பொருளில்லார்கு இவ்வுலகில்லை.
பழம் பழுத்தால் கிளிகள் வரும்
அழைக்கத் தேவை இல்லை.
குளம் நிறைந்தால் கொக்குகள் கூடும்
கூப்பிடத் தேவைஇல்லை.
பழகத் தேவை இல்லை.
சொத்து இருந்தால் சொந்தம் சேரும்
சுற்றம் தேவை இல்லை.
வசதி வந்தால் வாழ்வு உயரும்
வணக்கம் தேவை இல்லை.
வீடு என்றால் முகவரி ஆகும்
தேடத் தேவை இல்லை
பதவி வரும் பவுசு வரும்
பகட்டும் வந்திடும்.
காவல் வரும் ஏவல் வரும்
கர்வம் வந்திடும்.
எல்லாம் வந்தும் என்ன செய்ய
இல்லாமல் போனால்!
உள்ளதெல்லாம் காடு ஏக
உடன் வருமா?
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment