ஏய் கொரோனா --நீ
ஏன் வந்தாயோ!
வருந்தாத திருந்தாத பேர்களையே
வருத்தவே வந்தாயோ--சரியே
திருத்தவும் வந்தாயோ!
பிறந்தயிடம் கண்டுசெல்ல
பறந்துவந்த சொந்தமோடு
விருந்தாளி போலவே
கொரோனாவே வந்தாயோ!
பணந்தேடிப் பறந்தோரெல்லாம்
இனங்கூட வந்தாயோ!
பொருள்தேடி நிறைத்தோரெல்லாம்
கர்ணனாக்க வந்தாயோ!
மறந்துபோன ஒழுக்கங்கள்
மலர்ந்திட வந்தாயோ!
கலைந்திட்ட கலாச்சரங்கள்
விளங்கிட வந்தாயோ!
அறுந்தலைந்த விடலைகளை
அடக்கிட வந்தாயோ!
கேளிக்கை விரயங்களை
காலிசெய்ய வந்தாயோ!
ஆயாமடிக் குழந்தை தந்தை
தாயாக வந்தாயோ!
ஓய்வறியா பாட்டாளிமண்
சாய்வணைய வந்தாயோ!
குடிமறந்து குடிமகன்கள்
குடிதழைக்க வந்தாயோ!
அவசிய மற்றதெல்லாம்
அற்றதாக்க வந்தாயோ!
சீர்திருத்தி முடித்துவிட்டாய்.
நேர்பொருத்தி வடித்துவிட்டாய்.
விருந்தாளியாய் வந்த நீ
கொரோனாவே விடைபெறுக!
கொ.பெ.பி. அய்யா.
No comments:
Post a Comment