நன்றி கெட்ட உலகமடா,
பன்றிக் கூட்டம் பழக்கமடா
மனிதம் இல்லா மிருகத்துக்கு;
மனிதன் என்ற பெயர் எதற்கு?
தொற்றும் என்று அறிந்துதானே,
பற்றி யுன்னை தொட்டுத்தானே;
பிணி யுனக்கு தீர்த்துத்தானே:
பிணம் ஆனார் உன்னால்தானே.
பாது காப்பு ஆராய்ந்தும்,
பக்குவமாய் பாடம் செய்தும்;
பையுரையில்.மூடித் தானே;
மையவாடி கோண்டு வந்தார்.
மருத்துவரை தெய்வம் என்றும்,
மதிக்க வில்லை என்றாலும்;
இறுதி விடை பெறுவோர்கு
மறுக்கலாமா புதைக்க இடம்?
தன்னுயிரைப் பணயம் வைத்து;
மன்னுயிர் மீட்ட போராளிக்கு:
மண்ணும் சொந்தம் இல்லையோடா!
என்ன சொல்ல வெட்கக் கேடு!
உனக்கும் குழி ஆறடிதான்,
கணக்கு ஆழம் நாலடிதான்;
புலுப்பூச்சி தின்ற பின்னே:
புதைத்தயிடம் சொந்த மென்ன!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment