கனவு என்பது கண்டு மறவாது
மனதில் எழுந்த நெருப்பு--அது
ஒவ்வொரு இதயம் ஒவ்வொரு விதமே
செவ்வழி துடிக்கும் இலக்கு.
தூங்கும் போதும் ஏங்கும் மனதில்
தேங்கிய மூச்சாம் கனவு--அது
ஓங்கிய வேகம் பாங்கும் நினைவில்
தாங்கிய வீச்சாம் கனவு.
ஆசையின் பாசையில் பேசும் இரகசியம்
ஓசையில் மௌனம் கனவு--அது
தேசம் விளைந்த விஞ்ஞான மெல்லாம்
யோசனை வென்ற கனவு.
முன்னேறும் மனிதன் தன்னார்வ ஏக்கம்
கொண்டதன் ஊக்கம் கனவு--அது
ஒன்றிய சிந்தனை பண்ணிய அற்புதம்
என்றும் வளர்க கனவு.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment