Sunday, 5 April 2020

விளக்கேற்று.

விளக்கேற்று விளக்கேற்று
குலமகளே விளக்கேற்று.
மனிதரெல்லாம் மனிதரான
புனிதமான இந்நாளில்
விளக்கேற்று விளக்கேற்று.
குலமகளே விளக்கேற்று.

வனந்திரியும் விலங்கினங்கள்
இனம்புரியும் அறிவினங்கள்
கற்றுத்தந்த பாடங்களை
கற்றோமென இந்நாளில்
விளக்கேற்று விளக்கேற்று
குலமகளே விளக்கேற்று.

மனந்தொலைத்து அலைந்தவரும்
மனிதருள் கலந்தவரும்
உணர்ந்துமே மனிதங்காக்க
இணைந்தாரென இந்நாளில்
விளக்கேறுறு விளக்கேற்று.
குலமகளே விளக்கேற்று.

மக்களேபோலுரு கொரோனாவை
எக்காலம் எவர்கண்டார்?
தக்கதே தனித்திருப்போம்
சிக்காது இந்நாளில்
விளக்கேற்று விளக்கேற்று
குலமகளே விளக்கேற்று.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment