Tuesday, 18 February 2014

செம்மொழித் தமிழ்.

செம்மொழி வாழ்த்து

முதலொலியாம் முத்தாம்; வளர்மொழியாம்; வாய்த்தயிரு,
கண்ணாம், கருவிழியாம்,காலமாம்! -கன்னல் இனிமை, வளமை, இளமை
தனித் தமிழ் செம்மொழி.

பிறக்கும் பொழுதே ஒலியாய்
பிறக்கும் மொழி அம்மாவாம்! - சிறப்பிதுபோல் உண்டோ!
அறிந்து சொல்க பிறமொழியும்.
செறிநற் றமிழ் செம்மொழி.

அறம் பொருள் இன்பம் பேறும்
பெறும் பொருள் சொல்லும்
உறுந் தரம் திறமாய் வளமாய் 
சிறந்தும் நிலமதில் வாழும்
அருமைத் தமிழ் செம்மொழி.

பன்மொழி ஏற்றுப் பதித்த 
வண்பொலி இலக்கியங்கள்
தன்னிலைத் தேறி முன்னிலை
வென்றும் நின்றும் என்றும்
முன்னைத் தமிழ் செம்மொழி

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment