Saturday, 1 February 2014

எங்கே சொர்கம்.

எங்கே சொர்க்கம்?

கிண்ணத்தில் மது இருக்குது
எண்ணத்தில் அது துடிக்குது
வண்ணத்து பூச்சியைப் போல்
தன்னை அதில் தொலைக்குது.

பக்கத்தில் பொண்ணு இருக்குது.
வெக்கத்தில் அது சிரிக்குது.
சொர்க்கத்தில் இருப்பது போல்
துக்கங்கள் கலைஞ்சி போகுது.

எக்காளம் தான் கேட்குது.
ஏதேதோ தாம் வளருது.
எதைத் தொடச்சொல்லுது
எது என்னை வெல்லுது.

பறந்து பறந்து அலையுது.
பட்டாம் பூச்சி தேடுது.
மறந்து போதை மதுவையே
மயங்கி மாதை வளையுது.

வெக்கம் கெட்ட மதுவது
பக்கம் முட்டி உடையுது.
வெக்கம் விட்ட மாதிடம்
சொர்க்கம் கண்டு ஓடுது

இரண்டில் ஒன்று இயற்கை
இயல்பில் பெண்டு இன்பம்.
பொய்யாய் போதை செயற்கை
தீயாய் மதுவேன் துன்பம்.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment