இயற்கை சொல்லும் பாடம்.
ஒட்டிப் பிறந்த சொந்தமோ!
கட்டிப் பிறந்த பந்தமோ!
ஒருங் கிணைத்தது இயற்கையோ!
பிரித்து வைத்தது செயற்கையோ!
இயல்பில் கொள்ளும் பாசமோ!
இயற்கை சொல்லும் பாடமோ!
பொய்மை மயக்கும் போதுதான்
மெய்மை சொல்லும் அதிசயங்கள்
பாசத்தையும் நினைவூட்டும்.--வரும்
மோசத்தையும் வினைகாட்டும்.
இயற்கை காட்டும் சீற்றங்களை-நமக்கு
எச்சரிக்கை என மதித்தால்
மிச்சமுள்ள காலமெல்லாம்
அச்சமின்றி வாழ்ந்திடலாம்.
இயற்கை இவ்விதம் சிலநேரம்
மனிதம் பேச முனைவதுண்டு.
செயற்கை சேர்த்த சொந்தங்கள்
சிரமத் துணைக்கு பொருந்தாது.
இயற்கை சொல்லும் பாடங்களை
இனியேனும் கற்றுத் தேர்வோமோ
கொ.பெ.பி.அய்யா.
.jpg)
No comments:
Post a Comment