Tuesday, 4 February 2014

உல்லாசமோ!

உல்லாசமோ!

உலகம் எங்கள் மடிகளில் 
உல்லாசமோ!
பழகும் மொழிகள் மனங்களில் 
சல்லாபமோ!

ஆடும் ஊஞ்சல் ஓடும் போதும்
ஆனந்தமோ!
தேடும் இன்பம் கூடும் போதும்
சுகவாசமோ!

நீரும் நிலமும் தழுவும் பந்தம்
நிசமாகுமோ!
ஆறும் கடலும் அணையும் சொந்தம்
வசமாகுமோ!

முகடும் முகிலும் பரிசம் உரசும்
மழையாகுமோ!
பகலும் இரவும் அந்தி வருடும் சுகமாகுமோ!

ஆணும் பெண்ணும் கூடும் இன்பம்
சொல்லாகுமோ !
வானும் மண்ணும் சேரும் பந்தம்
வாழ்வாகுமோ!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment