Wednesday, 12 February 2014

பட்டமரம்.

பட்ட மரம்.

பட்ட மரம் ஒண்ணு
வெட்ட வெளி நிண்ணு
சொட்டும் பனி உண்டு-பாவம்
சொருகுதம்மா கண்ணு.

கூடு கட்டத் தேடி
ஓடி வந்த கூட்டம்`
வாடும் போது காணோம்-இது
வாழ்க்கை தந்த பாடம்.

பழம் கனிஞ்சா தேடும்
நிழல் தந்தா கூடும்.
இலை உதிர்ந்தா ஓடும்.-இது
பழகி வந்த பாடம்.

வரவி ருந்தால் உறவு
வலுவி ழந்தால் தெருவு.
பசை காஞ்ச பிறகு-இது
பாடை ஏறும் விறகு.

சொந்த முண்ணு சொல்ல
எந்த வொண்ணும் இல்ல.
எழுதி வச்சேன் எழுத்து –இது
பழு தறியா கருத்து.


கொ..பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment