Friday, 21 February 2014

ஒன்னம்மன் வாழ்த்து


வாழ்த்து
அம்மா ஒன்னுத் தாயம்மா!
அய்யா தொட்டன் துணையம்மா!
உழைக்கும் குலத்தின் தேவியே!
பிழைக்கும் வழியும் காமியே!

ஆயர் பாடித் தெய்வமே!
அழைத்துத் துதியும் செய்வோமே!
ஆவாய் எம்மைக் காத்துமே!
அருள வேண்டும் தீர்க்கமே!

கொல்லம் பரும்பு தேடியே! 
கோவில் கொண்ட தேவதையே!
கம்மாக் கரையதன் மேலேயே!
காட்சி தருகின்ற தீமகளே!

இலந்தை முள்ளுக் கோட்டையே!
எழுப்பக் கேட்ட காவிரியே!,
வளரும் தமிழிந்த நாட்டையே
வாழ்விப்பாய் அனுப்பர் தாயே!!.

புல்லாங் குழலையும் மீட்டுவாய்!
புதுப்புனல் நீயுங் காட்டுவாய்!
குடகு மலையின் கொடைமகளே
நடை பயின்றுவா காவிரியே!

நெருப்பில் பிறந்த தேவியே!
நீதி காக்குங் கோவியே!
வாடும் பயிரும் விளையவே
ஓடி வருவாய் காவிரியே!

உறுமிமேளம் தாளம் கொட்டி,
உனதுபுகழே கானங் கட்டி
உருக நாளும் கெஞ்சுகிறோம்.
வருக அருள்க ஒன்னம்மா!

பாட்டாளி குலமிங்கு அனுப்பராம்
பசிவலி  மறந்துமே வாழனும்.
கூட்டாக் கூடி ஒற்றுமையாய்
குலமெம்மை தழைக்க வைப்பாய்!.

அனுப்பர் எல்லாம் கூடுவோம்.
அம்மா அவளைப் பாடுவோம்.
அன்னை ஒன்னு காவிரியாம்.
அனுப்பர் குலத்தின் காவலவளாம்.



கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment