Wednesday, 26 February 2014

காதல் பித்து.

காதல் பித்து.

விழிவழி மொழிநீ மௌனமோ
உளிவிழி கொண்டு உடைத்தாயோ!
கழிமொழி பேசி கொன்றாயோ!
பழிகுழிக் காயம் படைத்தாயோ!
வழிவிழி பொழிய விட்டாயோ!

வில்லால் அடிக்கும் கல்லாலும்
பள்ளம் அள்ளும் புண்ணானாலும்
வெல்லும் மருந்தால் தீருமடி
சொல்லடி பட்ட  உள்க்காயம்
என்னடி மருந்தால் ஆறுமடி?

கண்ணால் பாடிய பண்ணாலே
என்னைப் பித்தன் ஆக்கினாய்.
உன்னைதேடி விண்ணைக்கூடி
பின்னைப் புத்தனாய் மாற்றினாய்.
இன்னைத் தனி வழி ஆற்றினாய்.

தூண்டில் படுமோ விண்மீனும்
தூரம்போனாய் கண்படுமோ!
அழைத்து என்பசி ஆற்றுவதார்?
மறுத்த காதலும் தேற்றுவதார்?
பொருத்தி ஒட்டவும் ஏற்பவரார்?

களிமொழி கசந்த பேதமோ!
வழி வழி தொடரும் பாவமோ!
இறையோ பேயோ சாபமோ!
இடையில் எவர் கொடுங்கோபமோ!
இன்று நானும் காவாமோ!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment