Wednesday, 12 February 2014

வெற்றியைத் தேடி.....

வெற்றியைத் தேடி.................!

விளக்கம் சொல்ல விளங்கிடும் பொழுதே
பழக்கம் அதையும் பழகிட வேணும்.
முழக்கும் முரசைப் போலவே முழங்கி
மூலை ஓய்ந்தால் தீராது –வெற்றி
காலை வணங்கி சேராது.

அன்பாம் புத்தன் அவன்வழி புகழ்வோர்
அதன்நடை பயில விரும்ப வில்லை.
இரக்கம் காட்டிய ஏசுவைப் போல
எவரும் மன்னிக்க இரங்க வில்லை-இன்னும்
ஏமாறும் அடிமை  தீரவில்லை.

பணிவைப் பழகி பாரதம் மீட்ட
பாபு அண்ணல் கோழையில்லை
கண்டிக்கும் வேதம் காட்டும் வேகம்
தண்டிக்கும் கோபம் தானில்லை-வாழும்
தர்மம் ஏனோ புரியவில்லை.

இளகிய மனமாய் ஈகைக்குணமாய்
இறைநபி வாழ்ந்தார் பொய்யில்லை
வழங்கிய சேதி வாழும் நீதி
வள்ளல் அவர் போல் சாட்சியில்லை-ஏற்று
வாழ்ந்தால் உலகில் வீழ்ச்சியில்லை.

மந்தம் கூடி சொந்தம் சேர்ந்து
மடத்தில் அரட்டை கூடாது.
பந்தாய் ஓடி பரவிப் பறந்து
உரிமை தேடி உழைப்பை நாடி-நீயும்
உயரும் உயரம் வெற்றியே!

கொ`பெ`பி`அய்யா`









No comments:

Post a Comment