கள்ளிப்
பூவிலும்.......
கள்ளிப்
பூவும் தேன் சுரக்கும்.
உள்ளிருந்தும்
தான் அழைக்கும்
சொல்லும்
வகை மணம் இழுக்கும்
அள்ளி
உண்ண அகம் பறக்கும்.
முள்ளிருக்கும்
பூக்கள் எல்லாம்`
முடிந்து
இனம் அழிவதில்லை.
சொல்வலிக்கும்
காதல் தானே
முள்விலக்கி
இதழ் விரிக்கும்.
இரவெல்லாம்
காத்திருக்கும்
உறவுக்காக
விழித்திருக்கும்.
விடிந்ததும்
பூத்திருக்கும்.
படர்ந்த
பனி உதிர்த்திருக்கும்.
காரணங்கள்
இல்லாமல்
காரியங்கள்
நிகழ்வதில்லை.
தோரணங்கள்
முயலாமல்
தூரமானால்
விளக்கமில்லை .
நேரம்
உண்டு காலம் உண்டு
நிகழ்வுக்குப்
பொருத்தம் உண்டு.
ஆறுவதால்
ஆறாது.
அது
விளையப் பருவம் உண்டு.
பதறினால்
சிதறிவிடும்.
உதறினால்
உதிர்ந்துவிடும்.
நினைத்த
காதல் நெஞ்சிலிடு
நிதானமாய்
தேடியெடு.
கொ.பெ.பி.அய்யா.
.
பொருள் :
தோரணம்
=ஆதாரம்.
.

No comments:
Post a Comment