Monday, 17 February 2014

ஏறு பூட்டி போறமச்சான்.

சஞ்சலங்கள் எதுக்கு?

ஏரு பூட்டி போற மச்சான்
என்னக் கொஞ்சம் பாரு மச்சான்
சோறு தண்ணி வெறுதிருக்கேன்
சுகமில்லாம சிறுதிருக்கேன்
ஊரு சனம் சிரிக்கி—நான்
உன்னினப்பு சிறுக்கி.

என்ன நான் சொல்லுவேன்டி
இன்னும் ரெண்டு குமறிருக்கு
அண்ணங்கிற பொறுப்பிருக்கு
அவங்க கவல எனக்கிருக்கு
எண்ணி ஒரு வருஷம்--நான் -
எடுத்து வாறேன் பரிசம்.

என்னப்போல குமறிருந்தா
எனக்கு அது பாவம் மச்சான்
உன்னைப்போல பொறுப்பிருந்தா
அண்ணங்கெல்லாம் சாமி மச்சான்
வருசந்தான கணக்கு—நீ ‘
புருசந்தான எனக்கு,

சத்தியமா சொல்லுரேன்டி
சாகாமத்தான் இருப்பேன்டி
இத்தரையில் உன்னவிட்டா
எனக்கு யாரு பொண்டாட்டியாம்,
முத்தழகு மானே –நீ
தித்திக்கிற தேனே.

மன்னவனே கண்ணாளனே
என்ன வார்த்த சொல்லுறியே
இன்னும் நூறு வருசத்துக்கும்
என்னோடதான் வாழுவியே
கண்ணு படும் போயா..ஊரு
மண்ணு சுத்திப் போட.

போடி போடி பைத்தியமே
தேடுறிய வைத்தியமே
மாடு போல உழைக்கிறவன்
மனசில் ஒண்ணும் வஞ்சம் இல்ல
சாமி துணை இருக்கு.—நமக்கு
சஞ்சலங்கள் எதுக்கு.?

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment