Wednesday, 26 February 2014

மயக்கும் சொல்லில் மயங்காதே!

சோராதே கண்ணே!

சோராதே கண்ணே சோராதே-பொய்யாம்
பார்வையில் பழகி  சோராதே !
கேளாதே கண்ணே கேளாதே-மயக்கும்
சொல்லில் மயங்கியும் வீழாதே(சோரா)

பேச்சும் எழுத்தும் நாடகமறிவாய்-அறிவை
மாற்றும் அழகுத் தந்திரமே.
துடிப்பையும் படிப்பையும் சுரண்டுவாரே--தனது
தோளுக்கு உயர்ந்தால் அழுத்துவார்.(சோரா)

நல்ல மனிதரெல்லாம் கள்ளம் அறியாமல்-வஞ்சப்
பள்ளம் விழுந்து தொலைந்திட்டார்..
உள்ள பொழுதினை உழைத்து உயராமல்-எவரோ
வெல்லும் படியாக கிடந்திட்டார்.

ஊர்நலம் வாழ வாழ்ந்து பாரு--காக்கும்
உண்மைக்கு சாவும் நேர்ந்து சாவு.
ஏமாற்றும் பொய்யனை நீமாற்ற வேண்டும்-தலைமை 
நீயேற்று உலகினை நேராக்கவேண்டும்.

கடமை உணர்வை மறந்தோம் அதனால்--பொது
உடைமைகள் சுயநலம் ஆகிறது.
விழித்துக் கொண்டால் அழிப்பவர் இல்லை-பாவம்
எதிர்த்து நின்றால்  பழியுமில்லை.

கொ.பெ.பி.அய்யா.


  

No comments:

Post a Comment