Wednesday, 5 February 2014

வெட்கம்.

வெக்கம்.............!

வெக்கம் கெட்டவன் விளங்கவே மாட்டான்.
விளங்க மறுப்பவன் வெக்கப்பட மாட்டான்.
நாணமும் வெக்கமும் மானத்தின் இருப்பு..
மானம் ஒன்றே மனிதனின் சிறப்பு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வெக்கம் பொதுவாம்.
அழகும் உணர்வும் அமைக்கும் அதுவாம்.
அக்கம் பக்கம் அருமை துதிக்கும்
வெக்கம் தன்னைத் திருமை மதிக்கும்.

அடிமைக்குள்  வெக்கம் அச்சம் விடுக்கும்.
மடிமைக்குள் வீரம் மறம்பெறத்  துடிக்கும்.
மானம் தூண்டி மனஉரம் கொடுக்கும்.
வானம் தாண்டி வருவினை முடிக்கும்..

பெண்ணுக்குள் வெக்கம் பிறவியில் பிறக்கும்.
தன்னுக்குள் தர்க்கம்  தருமத்தில் சிறக்கும்..
கண்ணுக்குள் காட்டும் பெண்குணம் விளக்கம்.
மண்ணுக்குள் ஏற்றும் மாண்பினை துலக்கும்.

அழுத்தம் இளக்கும் வெக்கம் வாழ்க!
திருத்தம் பழக்கும் வெக்கம் வாழ்க!
ஒழுக்கம் விளக்கும் வெக்கம் வாழ்க!
அருத்தம் துலக்கும் வெக்கம் வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment