கைபேசி
ஜாக்கிரதை !
பெண்கேட்டு
வந்தானென்று--கைபேசி
எண்ணேற்றித் தந்துவிட்டாள்.
பின்விசாரணை
செய்வதற்குள்--பாவம்
பெண்ணவன் வசமானாள்..
கைபேசி
பொல்லாதது--பொய்
காதலைத்தான் வளர்த்தது..
கொஞ்சும் மொழி பேசிப்பேசி--முதல்
மஞ்சம் கொண்டு சிதைத்தது.
வகை பலவாய் காமசுகம்--ஆசை
நகை பணமாய் உல்லாசம்.
மாப்பிள்ளை வேசம்போடும்--மோசடி
மன்னன் இன்று சிறைவாசம்.
எத்தனையோ
திருமணங்கள்--பாவி
அத்தனையும் மறுமணங்கள்.
அத்தெறியும் தாலிக்கெல்லாம்--நீதி
உத்தறியும் நியாயமென்ன!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment