Wednesday, 1 January 2014

பொன்னாகப் பேணி

பொன்னாகப் பேணி எல்லாம்.

நொடிகளெல்லாம் படிகள்
பழகி ஏறினால் பாதகமில்லை.
கடிதெனத் தயங்கினால்
காலம் உனக்கில்லை.

கல்லும் கலைவடிவாகும்.-அது
செதுக்கப் படும்போது..
சொல்லும் இலக்கியமாகும்--அது
விதையாய் விளையும் போது.

எண்ணம் துணையாகும்
எழுந்திடும் போது.
மண்ணும் பொன்னாகும்-அதை
உழுதிடும் போது.

உன்னால் முடியும் நன்மை
பொன்னாகப் பேணியெல்லாம்
இந்நாளே தொடர்கவே --உன்
பின்னாளும் வாழவே!

வேராய் வாழ்ந்திரு
வினையாய் விளைந்திரு!.
உலகே அழுதிடும்--உன்னை
இழந்திடும்போது

கொ.பெ.பி.அய்யா

No comments:

Post a Comment