Wednesday, 15 January 2014

தாவும் நினைவுகள்.

தாவும் நினைவுகள்.

உன்னைத் தானே உயிரில் நினைக்கிறேன்.
உலகை ஏனோ உணர மறக்கிறேன்.
என்னை நானே என்றும் தொலைக்கிறேன்.
இருந்தும் வீணே இறந்தே  அலைகிறேன்.

அறிவும் கெட்டு மோசம் செய்யுது.
அதுவும் பொய்தான் பேசிப் பழகுது.
நானும் இல்லை என் வசம் மானே!
நாளும் தொல்லை இது நிசம்தானே!

நீரிலும் நிலவாய் நீதான் சிரிக்கிறாய்.
நிலத்திலும் தென்றலாய் நீதான் தொடுகிறாய்.
விண்ணிலும் வண்ணமாய் நீதான் சொலிக்கிறாய்.
என்னிலும் உயிராய் நீதான் துடிக்கிறாய்.

பூவிடம் தானோ வாசம் செய்தாயோ!
பூத்ததும் வீசும் நேசம் கொண்டாயோ!
காதல் விலாசம் காட்டி மணந்தாயோ!
கனவில் சமரசம் ஊட்டி நிறைந்தாயோ!

தாவணி முகில்கள் தழுவும் முகடுகள்
சேவல் கூவியும் காவல் மீறாதோ!
ஆவணி வரட்டும் அதுவரைக் கனவுகள்.
தாவும் நினைவுகளைத் தவணை கூறாதோ!

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment