முத்தமிழாய் தோணுதடி!
முத்துப்போல் பல்லழகி!
முறுவலாய் சொல்லழகி!
கொத்துக் குலைக் கனியழகி!
கோவைப்பழ இதழழகி!
செப்புச்சிலை சீரழகி!--உன்னை
சேர்த்தணைக்கத் தோணுதடி!
திருவாரூர் தேரழகி!
தென்மதுரை ஊரழகி!
திருச்செந்தூர் அலையழகி!
தஞ்சாவூர் கலையழகி!
ஸ்ரீரங்கக் கோபுரமே!—உன்னை
சேவிக்கத் தேடுதடி!
தேனியூர்ச் செங்கரும்பே!
திருவண்ணைக் கற்கண்டே!
வேம்பாறுக் கருப்பட்டியே!
வெள்ளியணை அதிரசமே!
கோவில்ப்பட்டி மிட்டாயே!—உன்னை
நாவில் மொச்சத் தேடுதடி!
வால்பாறைத் தேநீரே!
பொள்ளாச்சி இளநீரே!
சிறுவாணித் தண்ணீரே
சிங்கப்பூர் பன்னீரே!
கொல்லிமலைத் தேனே—உன்னை
அள்ளிப் பருகத் தேடுதடி!
சாத்துக்குடி ஆரஞ்சே!
சேத்தூருக் கொய்யாவே!
கொடைக்கானல் பேரிக்காயே!
கோட்டாறுத் தேங்காயே!
சாத்தூரு வெள்ரிப்ப்பிஞ்சே—உன்னை
நாத்துண்ணத் தேடுடி!
தூத்துக்குடி உப்பழகே
ஆத்தூரு வெற்றிலையே
சேலத்து மாம்பழமே
மேலத்து மாதுளையே
மதுரைநகர் மல்லிகையே--உன்னை
மணக்கத்தான் தேடுதடி.
மொத்தமாய் தேடுதடி !
முத்தமிழாய் தோணுதடி!
கட்டிக்கொள்ள ஆசையடி!
ஒட்டிக்கொள்ள ஏங்குதடி!
சத்தியமாய் வேண்டுமடி!—உன்னை
நித்தம் நெஞ்சு தேடுதடி!!
கொ.பெ.பி.அய்யா.
முத்துப்போல் பல்லழகி!
முறுவலாய் சொல்லழகி!
கொத்துக் குலைக் கனியழகி!
கோவைப்பழ இதழழகி!
செப்புச்சிலை சீரழகி!--உன்னை
சேர்த்தணைக்கத் தோணுதடி!
திருவாரூர் தேரழகி!
தென்மதுரை ஊரழகி!
திருச்செந்தூர் அலையழகி!
தஞ்சாவூர் கலையழகி!
ஸ்ரீரங்கக் கோபுரமே!—உன்னை
சேவிக்கத் தேடுதடி!
தேனியூர்ச் செங்கரும்பே!
திருவண்ணைக் கற்கண்டே!
வேம்பாறுக் கருப்பட்டியே!
வெள்ளியணை அதிரசமே!
கோவில்ப்பட்டி மிட்டாயே!—உன்னை
நாவில் மொச்சத் தேடுதடி!
வால்பாறைத் தேநீரே!
பொள்ளாச்சி இளநீரே!
சிறுவாணித் தண்ணீரே
சிங்கப்பூர் பன்னீரே!
கொல்லிமலைத் தேனே—உன்னை
அள்ளிப் பருகத் தேடுதடி!
சாத்துக்குடி ஆரஞ்சே!
சேத்தூருக் கொய்யாவே!
கொடைக்கானல் பேரிக்காயே!
கோட்டாறுத் தேங்காயே!
சாத்தூரு வெள்ரிப்ப்பிஞ்சே—உன்னை
நாத்துண்ணத் தேடுடி!
தூத்துக்குடி உப்பழகே
ஆத்தூரு வெற்றிலையே
சேலத்து மாம்பழமே
மேலத்து மாதுளையே
மதுரைநகர் மல்லிகையே--உன்னை
மணக்கத்தான் தேடுதடி.
மொத்தமாய் தேடுதடி !
முத்தமிழாய் தோணுதடி!
கட்டிக்கொள்ள ஆசையடி!
ஒட்டிக்கொள்ள ஏங்குதடி!
சத்தியமாய் வேண்டுமடி!—உன்னை
நித்தம் நெஞ்சு தேடுதடி!!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment