பாட்டும் காதலும்.
உன்னைத் தானடி பாடுகிறேன்.
உன்னில் சொற்களை தேடுகிறேன்
கூடிய வரிகளைப் பாடிய பொழுது
ஓடியதேனோ தேடிய மானே!
நான்கு வரிகளில் நானுனைப்பாட
நாட்கள் எத்தனை நான் தொலைத்தேனோ!
ஆயிரம் பலபல பாடிய கம்பன்
ஆண்டுகள் எத்தனை விதைத் திருப்பானோ!
என்னைத் தொலைத்து வாடுகிறேன்
உன்னில் முளைத்துப் பாடுகிறேன்.
வள்ளுவன் பாடிய காமத்துப்பாலில்
கள்ளி உன்னைத் தேடுகிறேன்..
பாட்டு சும்மா வாவென்றால்
பாடிக் கொண்டே வருவதில்லை.
தேடி முயன்றால் கூடிவரும்
தேர்ந்த காதல் போல்மலரும்.
கொ.பெ.பி.அய்யா.
உன்னைத் தானடி பாடுகிறேன்.
உன்னில் சொற்களை தேடுகிறேன்
கூடிய வரிகளைப் பாடிய பொழுது
ஓடியதேனோ தேடிய மானே!
நான்கு வரிகளில் நானுனைப்பாட
நாட்கள் எத்தனை நான் தொலைத்தேனோ!
ஆயிரம் பலபல பாடிய கம்பன்
ஆண்டுகள் எத்தனை விதைத் திருப்பானோ!
என்னைத் தொலைத்து வாடுகிறேன்
உன்னில் முளைத்துப் பாடுகிறேன்.
வள்ளுவன் பாடிய காமத்துப்பாலில்
கள்ளி உன்னைத் தேடுகிறேன்..
பாட்டு சும்மா வாவென்றால்
பாடிக் கொண்டே வருவதில்லை.
தேடி முயன்றால் கூடிவரும்
தேர்ந்த காதல் போல்மலரும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment