Tuesday, 7 January 2014

சரணாகதி

சரணா கதி!

காமம் உண்ட கண்கள் கண்டேன்
கனவில் கண்ட காதல் உண்டேன்.
நினைவில் உண்டதை நேரில் கண்டேன்.
நித்திரை கண்டு நிதமும் உண்டேன்.

கையது திருக்கி மெய்யது முறுக்கி
கடைக்கண்ணாலே காந்தம் முடுக்கி
அதரம் சுருக்கி அவிழ்ந்த சிரிப்பு
அழைப்புத்தானது காமத் துடிப்பு.

கால்கள் பின்னிக் கோணி மேனி
கோலம் பெருவிரல் கீழே கீறி
பின்னே கரங்கள் இறுக்கி நாணி
முன்னம் முண்டுதல் மோகக் குறிப்பு.

பின்னல் ஜடையினை முன்னம் காட்டி
கன்னம் தட்டி கைவளை குலுக்கி
அன்னம் போலே தன்னை அசைத்து
வண்ணம் செய்வாள் காதல் குறிப்பு.

இடைவெளி சுருக்கி இனிக்க மொழிந்து
இடையினை விலக்கி உடைநிலை மறந்து
படையெனத் தானே பட்டு உரசி
தடையில்லை என்றே தான் சரணடைவாள்.

இலக்கியக் காதல் இதுதானென்று
துலக்கியப் பாதை தமிழ்தானென்று
பழக்கிய மாண்பே பழம்மரபென்று
வழக்கியல் வாழ்வே!வரமிதுவென்று!

கொ.பெ.பி.அய்யா.






No comments:

Post a Comment