பாரதப் பெண்கள்
நேரது பார்வை நிமிர்ந்த நெஞ்சம்
ஆளுமை உரிமை முழுமைச் சீர்மை;
வாழ்வுரிமை வென்றச் சிங்கப் பெண்மை.
வாகனம் ஓட்டவும் ஆகாயம் பறக்கவும்
ஏகமாய் துறைகள் எந்திரங்கள் இயக்கவும் ,
சமநிலை தீர்க்க எல்லைகள் காக்கவும்
சவாலாகிப் பெண்கள்
ஆண் சமம் ஆகினர்.
புரட்சிப் புதுமைச் சட்டம் பட்டம்.
நிறைவாய் உச்சம் திறமே
பெற்றும்,
கண்ணீர் சிந்திய காலம் மறந்தார்.
தன்னுரிமை வலிமை தானே துணிந்தார்.
வீராங்கணையர் வேலுநாச்சி
ஜான்சி ராணி நேரது ஆட்சி,
தேர்ந்த ஆண்ட வீர வரலாறும்,
புதைத்து மறைத்த பொல்லாக் காலம்,
விதைத்தது என்பதை விளங்காத கோலம்.
அடிமை மடமை அல்லாத பெண்மை,
உரிமை விடுதலை பாரதி
விதைத்தான்.
வீரத்தின் சாட்சி வென்ற பெருமை,
பாரதிப் புலவன் ஒருவன் உரிமை.
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment