எங்கே சொர்க்கம்.!
படிக்கப் படிக்கப் படித்ததும் தானே
படிந்தும் மனதிலும் பாடம் விளங்கும்.
நடப்பும் அறிவில் நடுவதும் தானே
படிப்பும் பயனும் ஆகும்.
நடப்பும் அறிவில் நடுவதும் தானே
படிப்பும் பயனும் ஆகும்.
பாடிப் பயின்றும் பழகிடும் பாட்டதும்
கூடி முயன்றும் குலவிடும் ஊற்றதும்
தேடித் திரளசைத் தேனாம் குரலிசை
நீடி நிறைக்கும் நெஞ்சம்.
கூடி முயன்றும் குலவிடும் ஊற்றதும்
தேடித் திரளசைத் தேனாம் குரலிசை
நீடி நிறைக்கும் நெஞ்சம்.
வடிக்க வளரும் வரைவிலும் ஓவியம்
படிக்க மிளிரும் வண்ணமும் காவியம்.
செதுக்கத் துலங்கும் சிலைபோல் கலையாம்.
பதிக்கக் கவிதை பாடு.
ஊடிக் கூடும் இன்பம் காதல்
கூடி வாழும் அன்பாம் வாழ்தல்.
தேடித் தேடும் செல்வம் ஈதல்
நாடும் ஞாலம் சொர்க்கம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment