கொட்டடி கொட்டடி கும்மிகள் கொட்டடி
கொரோனாவை ஒழித்தோமென
கும்மிகள் கொட்டடி.
தட்டடி தட்டடி கைகளத் தட்டடி
தியாகிகள் மருத்துவர் சேவையை வாழ்த்தி
தட்டடி தட்டடி கைகளத் தட்டடி.
கூட்டிப் பெருக்கி வீட்டக் கழுவி
வாசலத் தெளிச்சி வண்ணக் கோலங்களிட்டு
விளக்கை ஏற்றி தேசத்தைப் போற்றுங்கடி.
ஆளுமரசு நீளும் வயசு
வாழும் மேலும் மவுசு.
கொட்டடி கொட்டடி கும்மிகள் கொட்டடி
கொரோனாவை ஒழித்தோமென
கும்மிகள் கொட்டடி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment