உசுரு ரொம்ப முக்கியங்க
மசுரு இல்லீங்க.
கொரோனாட்ட மாட்டிக்கிட்டா
கொடுமை தானுங்க.
பத்திரமா வீட்டுக்குள்ள
பதுங்கிக் கொள்ளுங்க-உசுர
பதுக்கிக் கொள்ளுங்க.
வீட்டவிட்டு வெளியே வந்தா
வீணாப் போவீங்க.
எட்டிப் பாத்தா கொரோனாதான்
எமனா வாராங்க.
நாட்டரசு பேச்சக் கேட்டா
நல்லா இருப்பீங்க-குடும்பம்
நல்லா இருக்குங்க.
உங்களால ஊரழிய
வேணாம் கேளுங்க.
அங்க இங்க எஙகதாங்க
கொரோனா வீழுங்க
உங்க கையில் ஓட்டிக்கிட்டா
உசுரு வாழுங்க-நம்ம
உசுர வாங்குங்க.
உசுரு ரொம்ப முக்கியங்க
மசுரு இல்லீங்க.
கொரோனாட்ட மாட்டிக்கிட்டா
கொடுமை தானுங்க.
பத்திரமா வீட்டுக்குள்ள
பதுங்கிக் கொள்ளுங்க-உசுர
பதுக்கிக் கொள்ளுங்க.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment