சொன்ன பேச்சக் கேளுங்க-அரசு
சொன்ன பேச்சக் கேளுங்க!
இன்னும் ரொம்ப நாளைக்கு
மண்ணில் நீங்க வழுங்க!
கொரோனாவைப் போலங்க-வேற
கொடிய நோய் இல்லங்க.
அரக்கன் அந்த நோயங்க
அடியோடு ஒழிப்போங்க!
வேண்டாங்க வேண்டாங்க-யாரும்
வெளியே வர வேண்டாங்க!
தனிமைதான் மருந்துங்க
தைரியமா வாழுங்க!
எச்சரிக்கை வேணுங்க-எங்கும்
எச்சில் துப்ப வேண்டாங்க!
கைய்ய நல்லா கழுவுங்க
மெய்யா சுத்தம் செய்யுங்க!
கூட்டங் கூட வேண்டாங்க-கூடி
பேச்சு மூச்சு வேண்டாங்க!
தொட்டுப் பழக வேண்டாங்க
தூரம் நின்னு பேசுங்க!
பயப்படவே வேண்டாங்க-வதந்தி
வசப்படவே வேண்டாங்க!
சொன்ன சொல்ல நம்புங்க
ஒன்னும் இல்ல வம்புங்க!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment