Sunday, 29 March 2020

தனித்து போராடு

ஊரெல்லாம் கூடித் திரிந்தால்
கொரோனாவும் ஊர் சுற்றும்.
ஊரடங்கி தனித்திருந்தால்-அது
பேரடங்கி அழியும் செத்தும்.

வீரனெறால் தனித்து இரு
வீட்டுக்குள்ளே அடங்கி இரு
தனிமையிந்த ஆயுதந்தான்-கொடிய
கொரோனாவைத் தெறிக்க விடும்.

தனிமை கூட வேள்விதான்
தவம் அது போலத்தான்.
இனிமை ஆகும் வாழ்வுதான்-உலகில்
இனியில்லை கொரோனாதான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment