Friday, 27 March 2020

உயிர்மேல் ஆசை இல்லையா.

உயிர்மேல் ஆசை இல்லையா;
உங்களுக்கு குடும்பம் இல்லையா;
சுயபுத்தி தான் இல்லையா;
சொல் பேச்சும் கேட்பதில்லையா?

உலகில் என்ன நடக்கிறது;
உயிர்கள் எத்தனை பறக்கிறது;
மிச்சம் மீதி இருக்கனுமா?
மொத்த மாத்தான் தொலையனுமா?

கொரோனா என்றால் என்னென்று
புரிந்ததா புரிய வில்லையா?
எமனென்றால் எவன் என்று
இவன்தான் அவன் இன்று.

பத்திரமாய் வீட்டுக் குள்ளே
மொத்தமாய் ஒளிஞ்சுக் கிட்டா
சத்தியமா கொரோனா சாவான்
உத்தமம் உங்களுக்கு.

கொ.பெ.பி.அய்யா.






No comments:

Post a Comment