Wednesday, 25 March 2020

வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க!

உங்க
காலைத் தொட்டு வணங்குகிறேன்
கவனங் கொள்ளுங்க-சாமி
கவனங் கேளுங்க.
கொரோனாவ ஒழிக்க நல்ல
மருந்து தானுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

வேளை இப்போ சரியில்ல
காலில் விழுகிறேன்-பாவி
எமனாகக் கொரோனாதான்
எஙகுந் திரியுறான்-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

நாடு ரொம்ப ஆபத்துல
வாடி அழுதுங்க-நாசக்
கேடு கெட்ட கொரோனால
பாடா படுதுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

கொஞ்ச நாளு பொறுத்துக்கோங்க
கெஞ்சிக் கேக்குறேன்-கொடிய
நஞ்சான கொரோனாவும்
அஞ்சி ஓடும்ங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

அரசு சொல்லும் பேச்ச நல்லா
புரிஞ்சு கொள்ளுங்க-நம்ம
உசுரு நமக்கு முக்கியம்னு
உணர்ந்து கொள்ளுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

எதிர்காலம் இனிமையாக
தனிமை பேணுங்க-ஓயாம
கை கால்கள் சுத்தமாக
கழுவ வேணுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment