Tuesday, 31 March 2020

தொட்டாலும் பட்டாலும்.......!

மனிதனை மனிதன் தொட்டாலும்
தொடாமல் மூச்சுப் பட்டாலும்
தொற்றிக் கொள்ளும் கொரோனாவோ-சமூகத்தை
சுற்றிக் கொல்லும் விலகிப் போ!

கிட்டக் கிட்டச்  சேராதே.
விட்டு மூன்றடி நெருங்காதே.
மனிதனைத் தானே ஊடகமாய்-கொரோனா
மனிதரில் பரப்பிட ஏறி வரும்.

தும்மல் இருமல் மூச்சடைத்தால்
சும்மா மெத்தனம் கூடாது.
மருத்துவ சோதனை செய்தாலும்-வாரம்
பொறுத்து தனிமை காத்திடலாம்.

இறைவன் அவனிடம் கையேந்தி
இறைஞ்சி தனித்தே சுபம் வேண்டி
சமூகம் வாழ வீடிருப்போம்-வைரஸ்
கொரோனா ஒழிய தவமிருப்போம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment