Thursday, 13 February 2025

அம்மா என்றால் ஆரம்பம்.

அம்மா என்றால் ஆரம்பம்.

'அம்மா' எந்தன் முதல் பேச்சு,
ஆரம்பம் அதுவே அழைப் பாச்சு.
அன்பின் ஆதாரம் அவதாரமே!
ஆசாரம் இறைவி நீ ஆதாரமே!

உயிரின் இயக்கம் மூச்சு நீ!
உடலின் வடிவச் சிற்பி நீ!
உன்னை உணவு  ஆக்கி நீ!
என்னைப் படைத்த சக்தி நீ!

எண்ணும் எழுத்தும் பழக்கம் நீ!
கண்ணும் கருத்தும் விளக்கம் நீ!ண்
பேசும் பேச்சு  அறிமுகம் நீ!
பாசை அழகுத்  தமிழும் நீ!

ஐயம் தீர்த்த ஆசான் நீ! 
மெய்யாம் கீர்த்தி ஞானி நீ!
ஐந்தில் வளைத்தாய் பயிற்சி நீ!
ஆக்கம் நிமிர்த்தாய் முயற்சி நீ!

அருமருந்தாய் அமிர்தம் ஊட்டினாய்.
வரும் பிணிக்குத் தடைப் பூட்டினாய்!
பசித் தழுத முதல்க் குரலை
இரசித் தணைத்து முத்தம் பதித்தாய்!
 
ஒலியும் மொழியும் அம்மா நீ!
ஒளியும் வழியும் அம்மா நீ!
 வாழ்வும் வாழ்த்தும் அம்மா நீ!
ஆக்கம் ஊக்கம் அம்மா நீ!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment