வருஷம் ஒன்னு போயே போச்சு.
வயது ஒன்னும் ஆயாச்சு.
போனதால் ஆனதோ!
ஆனதால் போனதோ!
ஆச்சோ ! போயே போச்சோ!
ஆயுளொன்னு தீர்ந்து போச்சு.
வருஷம் ஒன்று வாழ்ந்தாச்சு,
வயது ஒன்றும் மீண்டாச்சு,
வாழ்ந்த காலம் கடந்தாச்சு,
வயது ஒன்றும் முடிந்தாச்சு.
ஆயுட் காலம் வாழ்ந்த மீதம்
ஆரறிவார் தேவ இரகசியம்.
போன வயதும் மீளாது
ஆனது வருஷம் தேராது.
வாழ்ந்த வரை இலாபமே, வாழும் வரை யோகமே.
வாழ்வதும் மீள்வதும் நாளொன்றும் கடந்து போகும்.
வாழ்வதும் ஆள்வதும்
நாளென்ன! பொழுதென்ன!
ஊரென்ன பேரென்ன!
குணமென்ன! குலமென்ன!
வாழ்வதும் ஊராவோம்,
வாழ வைத்தும் நாமாவோம்.
நானென்ன! நாமென்ன!
நாமம் என்ன! சேமம் என்ன!
மனம் போல் வாழ் வென்ன!
இனமென்ன!தனமென்ன!
கனமென்ன!புகழென்ன!
பிணமானால் எவரென்ன பேரென்ன!
பெற்றாரைப் பேணாமல்,
உற்றாரைச் சாராமல்,
மற்றாரைக் காணாமல்,
வாழ்ந்தென்ன!வசதியென்ன!
வனம் போன பின்னாலே:
வாழ்வென்ன!தாழ் வென்ன!
எழுபத்தாறு வயது போச்சு,
உழுத்தப் பழசு உடலாச்சு,
பழுத்த முதிர் பழமாச்சு.
அலுத்துப் போன மனசாச்சு.
எழுத்து என்ன எழுதி வச்சான்,
எழுதி வச்சேன் இருந்த சாட்சி
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment