பாயிரம் முயன்ற பழைமைத் தமிழே
ஆயிரங் காலங்கள் புதுமைத் தமிழே!ஆழ்கடல் சூழ ஆண்டிட்ட தமிழே!
வாழ்வே நிலையென வாழுந் தமிழே!
வேண்டுஞ் செம்மை விளங்குஞ் செந்தமிழே!
உலகம் பழங்கிய முதல் மொழித் தமிழே!
பழகிட இன்பம் அழகிய தமிழே!
மொழிந்திட இனிக்கும் மும்மொழித் தமிழே!
வரைமுறை வகுத்த இலக்கணத் தமிழே!
இறைவனை வென்ற
இலக்கியத் தமிழே!
வாழும் நாளும் வளருந் தமிழே!
காலம் முதிர்ந்த கன்னித் தமிழே!
மேலும் செழித்து வாழ்கத் தமிழே!வாழ்கத் தமிழே!
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment