Sunday, 27 September 2015

அழியாத கொடை.

அழியாத கொடை!
---------------------------

அலங்காரம் ஆரவாரம் ஆண்டும் நலிந்தும்
கழறும் இழிமயிராம் குப்பை-புழங்கும்
உடலும் பிணமாம் புகழுறா உயிராம் 
மடியும்மண் வாழாது செத்து.

மனிதனுக்கு வழங்கப்பட்ட 
கொடைகளில் அழகுக்காக
அழியாத ஒன்று சிகைதான்.. 
உதிரும் வரைதான்
அது முடி.

உதிர்ந்த பின்
அது மயிர்.
அந்த மயிரை யார் மதிக்கிறார்கள்!
அது அசிங்கமாகிவிட்ட
அநாவசியமாக அப்புறப்படுத்தப்படுகிறது.

உடலும் அப்படித்தான்.
அது உயிரோடு
இருக்கும் வரைதான்
தொடரும் அலங்காரம்.
உடலும் உயிர் போனால்
அது பிணம்.

பிணமானபின்
பெயரதற்கு சவம்.
பேருக்கு சாவுண்டு.
பேரொடு புகழுக்கு
மரணமில்லை.

அதனால்
புகழோடு வாழ பேரெடு!
புகழே உயிர்.
உயிருக்கு அழிவில்லை.

மற்றெல்லாம் மயிரே!
மண்ணுக்குள் மடிவதே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment