Monday, 21 September 2015

கூறும் புகழ் வேடநத்தம்.

இப்படியும் ஓர் ஊர்!

பாருக்கெல்லாம் கேட்கட்டும்-வாழும்
ஊரொன்றும் நாடு மெச்சும்.
நேரில்லா தேறும் பேரும்--ஊராம்
சீரும் திரு வேடநத்தம்.

தமிழ் மரபு கட்டுக்குள்--உள்ளூர்
தனி அரசு பற்றுக்குள்.
தொல் உறவு ஓட்டுக்குள்--இன்றும்
செல்லும் ஊர் வேடநத்தம்.

ஊருக்கெல்லாம் ஒரு மனம்-சிந்தை
உள்ளுக்கெல்லாம் ஒரு இனம்.
பாருக்கெல்லாம் ஒரு பாடம்--கற்றுக்
கூறும் புகழ்  வேடநத்தம்.

சாதியெல்லாம் பேருக்குத்தான்--சமூக
நீதி சொல்லும் பாருக்கேதான்.
பேதம் செய்யும் பாவமெல்லாம்--பழகு
வாதம் இல்லா வேடநத்தம்.

வேற்று மதம் பேச்சில்லை--தமிழ்
மாற்று மொழி மூச்சில்லை.
ஒன்றென்ற மக்கள் நிலை--என்றும்
நின்று வாழும் வேடநத்தம்.

வந்தாரை வாழ வைக்கும்--ஒரு
சொந்தமாய் கூடி மொய்க்கும்.
முந்தித் தேடி ஆதரிக்கும்--மனம்
ஒன்றி நீளும் வேடநத்தம்.

ஊருக்கு அழகு கோவில்கள்--கோவில்
சீருக்கு அழகு வாவிகள்.
உயர்வுக்கழகு ஒரு தலைவன்-அந்தப்
பெயருக்கழகு கரிய மாலழகன்

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment