வாழ்க்கை என்றால்......
வாழ்க்கை என்றால் என்னவென்று
வாழ்ந்து பாரடா--அதில்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வென்று செல்லடா.
எட்டிப் பார் எத்தனை பேர்
இறைவன் போலடா--அவர்கள்
காட்டுகின்ற வழிகள் கோடி
கண்டு தேடடா.
தேடி ஒன்று வேண்டுமென்றால்
ஓடித் தேடடா--எதுவும்
தேடாமல் கூடும் என்றால்
தோல்வி ஒன்றேடா.
தனக்கு என்ன முடியுமென
தானே தேடடா--அதற்கும்
தகுதிதானா தானேயென
தன்னில் கூட்டடா.
படித்த தென்ன முடித்த தென்ன
பயின்ற தென்னடா--செய்த
பயிற்சி யென்ன முயற்சி யென்ன
இயல்பு செய்யடா.
விழுந்தாலும் எழுவதற்கே
அழுவ தெதற்கு--வெற்றி
தோல்வியில்தான் தொடங்குதடா
துணிந்து வாழடா.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment