Friday, 29 August 2025

இரகசியமும் அதிசயமும்

இரகசியம் அதிசயம்

பூவுக்குள் தேனெடுக்கும் இரகசியம்
தேனீக்குத்தான் தெரிந்த அதிசயம் 
வானுக்குள் நீ ரெடுக்கும் இரகசியம்
காற்றுக்குத்தான் அறிந்த அதிசயம்.

மாதுக்குள் மதுவிருக்கும் இரகசியம்
காதலில் தான் விளங்கும் அதிசயம் 
கண்ணாலே மொழி பேசும் இரகசியம்
பெண்ணாலே தான்மொழிந்த அதிசயம்.

வண்ணத்தின் கலைகண்ட இரகசியம்
வண்ணத்துப் பூச்சியின் அதிசயம்.
எண்ணத்தின் சிலை கொண்ட இரகசியம்
கண்ணத்தின் சுவை நின்ற அதிசயம்.

மொட்டுக்குள் மலர் விரியும் இரகசியம்
கட்டுக்குள் கன்னியின் அதிசயம்.
சிட்டாக வண்டாடும் இரகசியம்
பட்டாடைப் பாவாடை அதிசயம்.

பெண்ணென்றால் கண்ணென்ற இரகசியம்.
மண்ணின்ற மாண்பது அதிசயம்.
பொன்னென்ற ஒளி அந்த இரகசியம்
பெண்ணவள் வழிவந்த அதிசயம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


No comments:

Post a Comment