நம்மால் எதுவும் முடியா தில்லை மனிதா,
நன்னாள் பொழுதும் விடியா தில்லை இனிதா.
தானே அதுவே செத்துப்போகும் கொரனா.
நாமே விலகி பழகி வாழ்ந்தால் நலமே!.
பாரா தென்ன பழகா தென்ன நோவா!
தீரா தென்ன தெளியா தென்ன நோயா!
காலம் மாறும் கோலம் போன்றே கொரனா:
தானே மாறும் நோயும் தீர்ந்தும் நலமே!.
நோயைக் கூட காசாய் மாற்றும் ஆவி,
தாயைக் கூட வாயால் ஏய்க்கும் பாவி.
வீணில் ஆய்ந்த நாசந் தானோ கொரனா:
மேனி கூசா வேசிச் செயலிது நலமோ!.
ஆறறி வாண்டு வாழ வாழ்ந்தால் மனிதன்.
ஏழறி வூன்ற தொலைத்தா யேனடா மனிதம்?
செயற்கையோ திமிரோ செய்வினை கொரனாவோ!
இயற்கையோ இறைவனோ மறக்கலும் நலமோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment