வீரனாய் வீட்டிலே விலகியிரு.
சூரனாய் மூஞ்சிக்கு கவசமிடு.
தனிமை தானது ஆயுதம்:
தனக்குள் ஆனது சூலாயுதம்.
தன்னைத் தானே காப்பதுவும்,
தன்னில் வலிமை சேர்ப்பதுவும்,
மனிதர் பிறர்நோய் தடுப்பதுவும்:
தனிமை விரதம் தான்கவசம்.
கொரனா கொடிய நோய்க்கிரிமி,
இருமலில் வெடிக்கும் தீய்ப்பரவி.
கைகள் தானது தொடர் தேடல்;
வாய்கள் ஒன்பதும் நுழைவாசல்.
கைகள் சுத்தம் கறை கழுவு.
மெய்கள் முற்றும் நிறை முழுகு.
உள்ளும் உடலும் பிழை விலக்கு.
சொல்லும் செயலும் நலம் பழக்கு
தொற்றாத ஒட்டாத இடைவெளியே:
செத்தாகக் கொரனா தொடர்முறிவே!
கிட்டவே கொஞ்சநாள் தவநெறியே,
கட்டாயம் மிஞ்சுவோம் புவிநிறைவே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment