Thursday, 8 January 2026

அனுபவப் பாடங்கள்.

அனுபவப் பாடங்கள்.

ஆயிரம் பாடங்கள் படித்தாலும்
அனுபவம் படித்ததே வழிமுறை
சாயிர பொழுதில் வாழ்ந்தோரின்
சாதனை யாவும் திருமறை.

எழுதிய தெல்லாம் அனுபவங்கள் 
விழுமியங்கள் சொல்லும் பாடங்கள்.
வாழ்ந்து முடித்த பெரியோரின
வாழ்க்கை ஓவ்வொன்றும் வேதங்கள்.

கற்பனை வடித்த கனவுகளை
கண்களில் கண்ட உண்மை களை
சொற்பதம் சொன்ன சரித்திரங்கள்வ
அற்புதம் வென்றவர் சித்திரங்கள்.

நூலென நுழையும நூலிழைகள்
நுழைந்து விளையும் காதுளைகள்
நூல்கள் நூற்ற பதவுரைகள்
ஆள்வன ஆற்றும் பொழிப்புரைகள்.

கலைகள் எல்லாம் கற்றவைகள்
கற்றவை எல்லாம் பெற்றவைகள்.
பெற்றவை கற்றவை அனுபவங்கள் 
உற்றவை ஏற்றவை பாடங்கள்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment