வீடுகளா கூடுகளா!
வீடுகளா கூடுகளா விளங்கவில்லையே!
வாழுவதும் மனிதர்களா துலங்கவில்லையே!
விடியலுக்குக் காத்திருக்கும் பறவைக் கூட்டமாய்
வெளிச்சமென நம்பித்தான் பறந்து தேடுதோ!
நரகமா நகரமா புரியவில்லையே!
அவலந்தான் வாழ்க்கையா தெரியவில்லையே!
நாற்றமே காற்றாகி நகரும் நெருக்கமாய்
நாதியற்ற துயரந்தான் நாகரிகமா!
அவசரமே வாழ்க்கையா தெரியவில்லையே!
அடையுமிடம் எங்கேயோ
தோணவில்லையே!
பழகிக்கொள்ள நேரமில்லா
உறவுப் பஞ்சமாய்
வாழும் இந்த வாழ்க்கைதான்
மனித நேயமா!
கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment